• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராமசாமி சோமசுந்தரம்

மண்ணில் 02 FEB 1944 / விண்ணில் 12 MAY 2025

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், இல. 105 அரசடி வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி சோமசுந்தரம் அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன், பிரபாகரன், பிறேம்நாத், பிரபாலினி, றாஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாங்கனி, மைதிலி, தனுஷா, மேர்வின், திருமாறன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஸ்வர்யா, அக்‌ஷேய், அஸ்வினி, நீரன், யஷ்வன், திரிஷ்டன், ஜதுனன், யஷ்வி, லக்ஷ்வி, யுவன், அக்ஸல், ஷான்வி, இனியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பொன்னம்மா மற்றும் மங்கயற்கரசி, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தர்மலஷ்மி, ராஜா, செல்வராசா, காலஞ்சென்றவர்களான தர்மரெத்தினம், தர்மகுலசிங்கம், மற்றும் தர்மலீலா, தர்மசுசீலா, ஸ்ரீராணி, மகாலெட்சுமி, மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-05-2025 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 15-05-2025 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல 105, அரசடி வீதி,
யாழ்ப்பாணம்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபாகரன் - மகன்

    Mobile : +94777889455

Leave a Reply