• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஸ்ரீபதி பரமேஸ்வரி

பிறப்பு 02 APR 1942 / இறப்பு 06 APR 2025

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீபதி பரமேஸ்வரி அவர்கள் 06-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான உரும்பிராயைச் சேர்ந்த பசுபதி சுபத்திரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீபதி (Chartered Quantity Surveyor) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, நடேசபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவசி(Quantity Surveyor) அவர்களின் அன்புத் தாயாரும்,

சுகன்யா (விரிவுரையாளர், வவுனியா பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

ஜய்தேவ், தேனுஜன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

சித்தங்கேணியைச் சேர்ந்த சண்முகநாதன், அருந்ததி தம்பதிகளின் சம்பந்தியும்,

காலஞ்சென்ற சுசீலாவதி, நடனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ஜெயபதி, தர்மபதி மற்றும் தனபதி, கமலாஜினி, காலஞ்சென்ற தயாபதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திராணி, தனலட்சுமி, சுமதி, சிவனேசராஜா, பிறேமா ஆகியோரின் சகலையும்,

ஸ்கந்தபிரசாத், மிருணாளினி, சிவேந்திரன், கிருஸ்ணாலினி ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 149, குட்செட் வீதி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தேவசி - மகன்

    Mobile : +94767066732

Leave a Reply