
திருமதி பத்மாவதி சண்முகநாதன்
பிறப்பு 26 MAR 1941 / இறப்பு 15 MAR 2025
மலேசியா Kuala Lumpur வைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணை மேற்கு நாரந்தனை கந்தசாமி கோவிலடி வைமன் வீதி, நல்லூர், கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சண்முகநாதன் அவர்கள் 15-03-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், வேலணை மேற்கு தலைகாட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற தம்பிராசா, அன்னம்மா(நல்லம்மா) தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகநாதன்(முன்னாள் நாதன் அன் கோ உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பரஞ்சோதியம்மா, திருநாவுக்கரசு, வாலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலமனோகரன்(கனடா), நாகந்தினி(தெஹிவளை), திரிபுரநாதர்(தெஹிவளை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுசூயா, வாதவூரன், கோபிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கௌதம், கீதன், ஜீவிதன், அஞ்சலி ஆகியோரின் அப்பம்மாவும்,
வருண் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ஞானானந்தம், சிவசுப்ரமணியம், சிவலிங்கம், கனகசுந்தரம், பரமசிவம் மற்றும் மகாலிங்கம், தவமணி மற்றும் காலஞ்சென்றவர்களான முத்துலச்சுமி, கனகரெத்தினம், சாவித்திரி, சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும்,
தில்லைநடராஜா, பத்மலோசனி, காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மனோன்மணி, சிவசுப்ரமணியம் மற்றும் சுலோக்சனா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் 15 சிறிபால வீதி கல்கிசையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாலா - மகன்
Mobile : +14162626001
நந்தினி - மகள்
Mobile : +94779717194
திரிபுரநாதர் - மகன்
Mobile : +94772313223
Leave a Reply