திரு சண்முகநாதன் திபாஹரன்
பிறப்பு 12 MAR 1973 / இறப்பு 15 JAN 2025
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் திபாஹரன் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வரணி வேலுப்பிள்ளை சண்முகநாதன், சுந்தரராணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சின்னத்துரை நடராசா(இணுவில்- ஓய்வுநிலை காணி உத்தியோகத்தர், மாந்தை கிழக்கு, துணுக்காய்) பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா(முன்னாள் ஆசிரியை பாண்டியன்குளம் மகா வித்தியாலயம் - மல்லாவி, தற்போதைய ஆசிரியர் நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
தாமோதரன்(மாணவன் - St.Thomas College- Galkissa) கௌரிசங்கரன்(மாணவன் - St.Thomas College - Galkissa) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஹரிஹரன்(கண்ணன்), அங்கவை(அவுஸ்ரேலியா), சங்கவை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அரவிந்தன், சங்கீதா(பிரான்ஸ்), கிரிதரன், சிவதட்சணி, ஜீவராஜ், சிறிசுதன், துஷ்யந்தன், அர்ச்சனா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் மற்றும் நாகபூஷணி ஆகியோரின் மருமகனும்,
கணேசநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான சிவநாதன்(கனடா), கணேஷ்வரி மற்றும் தவமலர், சிவமலர் ஆகியோரின் பெறாமகனும்,
பிராமி, லதாமி ஆகியோரின் சித்தப்பாவும்,
ஹரிணி, அனுஷ்கா, அபிநிஷா, கவிநயன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஹர்ஷிணி, சபரிஹரிஷ் மற்றும் சாம்பவி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-01-2025 வியாழக்கிழமை அன்றும் 17-01-2025 வெள்ளிக்கிழமை அன்றும் மு.ப. 9:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 18-01-2025 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்திற்கு (மஞ்சத்தடி, இணுவில்) எடுத்துச் செல்லப்பட்டு, 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஹரிஹரன் - சகோதரன்
Mobile : +94777360079
தாமோதரன் - மகன்
Mobile : +94773366231
Leave a Reply