கனடா - அலைபேசி தடையை எதிர்த்து மாணவர்கள் பாரிய வெளிநடப்பு போராட்டம்
கனடா
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள மற்றும் புதிதாக வரவுள்ள அலைபேசி தடைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர்தரப் பாடசாலை மாணவர்கள் புதன்கிழமை பிற்பகல் ஒருங்கிணைந்த வெளிநடப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டம், மாகாணம் முழுவதும் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் பிற்பகல் 2:30 மணியளவில் ஆரம்பமானது.
கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில், முதலாம் தவணையின் போது உயர்தரப் பாடசாலை வகுப்பறைகளுக்குள் அலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு மாகாண அரசாங்கம் தடை விதித்திருந்தது.
அடுத்த தவணை முதல், பாடசாலை நேரம் முழுவதும் அலைபேசிப் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்படவுள்ளது. முன்னதாக, பாலர் வகுப்பு முதல் 8 ஆம் தரம் வரையான மாணவர்களுக்குக் கல்வியாண்டின் ஆரம்பம் முதலே பாடசாலை நேரங்களில் அலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தலைநகர் ஃப்ரெடெரிக்டன் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாகச் சென்றவாறு, "அலைபேசியை விடுவி" எனக் கோஷங்களை எழுப்பினர்.
எனது அலைபேசி இல்லாமல் பாடசாலையில் எனக்குப் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறது.
அலைபேசிகளை விடப் பாடசாலைகளில் கவனிக்கப்பட வேண்டிய பாரதூரமான பிரச்சினைகள் பல உள்ளதாக மாணவி ஓருவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரம் முழுவதும் அலைபேசிக்குத் தடை விதிப்பது மிக அதிகப்படியானது என மற்றொரு மாணவர் தெரிவித்தார்.






















