• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலியில் 300 படுக்கைகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டடம் திறந்து வைப்பு

இலங்கை

2,808 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராப்பிட்டிய மருத்துவ பீடத்திற்குச் சொந்தமான புதிய பத்து மாடிகளைக் கொண்ட பேராசிரியர் சிகிச்சை விடுதிக் கட்டடத் தொகுதியை (Professorial Ward Complex) நேற்று (15) பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

300 படுக்கைகளைக் கொண்ட இந்தச் சிகிச்சை விடுதிக் கட்டடத் தொகுதியில், மருத்துவம், சத்திரசிகிச்சை, மனநல மருத்துவம் மற்றும் மகப்பேறியல் விடுதிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன், 08 படுக்கைகளைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, 03 நவீன சத்திரசிகிச்சைக் கூடங்கள், 08 வெளிநோயாளர் சிகிச்சை அறைகள்  மற்றும் மருத்துவப் பரீட்சை மண்டபம் ஆகியவையும் இதில் உள்ளடங்குகின்றன. 

இதன் மூலம் காலி தேசிய வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்புச் சேவைகளின் திறனை மேம்படுத்தவும், மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கான வசதிகளையும் விரிவுபடுத்தவும் முடியும். இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர் சங்கம், நன்கொடையாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் பங்களிப்புச் செய்துள்ளன.
 

Leave a Reply