நவுரு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடான நவுருவில், அரசாங்கத்தை எதிர்த்து வந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது ஆளும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளதால் நாடாளுமன்றில் எதிர்கட்சி வெற்றிடமாக உள்ளது.
19 உறுப்பினர்களைக் கொண்ட நவுரு நாடாளுமன்றத்தில், இதன் காரணமாக எதிர்க்கட்சி இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அரசாங்கத்தை எதிர்த்து வந்த பியோன் டெய் (Pyon Deiye) மற்றும் ஜேசன் பிங்காம் அகிர் (Jason Bingham Agir) ஆகிய இருவரும் துணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், நவுரு நாடாளுமன்றத்தில் உள்ள 19 உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவூரு என்பது ஆஸ்திரேலியாவிற்கு வடகிழக்கே, மைக்ரோனேசியாவில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறிய தீவு நாடாகும்






















