• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உத்தேச பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து இராஜதந்திர தூதுக்குழுக்களுடன் சஜித் பிரேமதாச கலந்துரையாடல்

இலங்கை

இலங்கையின் உத்தேச பாதுகாப்புச் சட்டங்கள், அரசியலமைப்புப் பாதுகாப்புகள் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் தொடர்பான பாரதூரமான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இராஜதந்திர தூதுக்குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்றை இன்று (25) ஏற்பாடு செய்திருந்தார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடலில் ஆரம்பத்தில் கவனம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொண்டதுடன், இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட தற்போதைய மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் உத்தேச சட்டவரைவு குறித்தும், அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டத்தின் இறைமை மீதான அதன் சாத்தியமான தாக்கங்கள் குறித்தும் தங்களது கடுமையான கவலைகளை வெளிப்படுத்தினர்.

நாட்டின் சட்டங்களை ஆராய்தல், சுயாதீன நிறுவனங்களைப் பாதுகாத்தல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்பதை உறுதிப்படுத்துதல் என்பன பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கும் பாரதூரமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கும் எதிராகத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பது, பயனுள்ள நீதித்துறை மேற்பார்வையுடனும் சிவில் பிரஜைகளின் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
 

Leave a Reply