• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்பதிவிலேயே பல கோடி வசூலித்த ராமாயணா திரைப்படம்...

சினிமா

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ள திரைப்படம் ராமாயணா.

2 பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இதேபோல் ராவணன் வேடத்தில் யஷும், லட்சுமணனாக ரவி துபேயும், ஹனுமனாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. படத்​துக்கு ஆஸ்​கர் விருது பெற்ற ஏ.ஆர்​.ரஹ்​மானும், ஹாலிவுட்​டின் புகழ்​பெற்ற ஹான்ஸ் ஜிம்​மரும் இணைந்து இசையமைத்​துள்​ளனர்.

இப்​படத்​தின் முதல் பாகம் தீபாவளியை முன்​னிட்டு நவம்பர் 5ம் தேதி வெளி​யாகிறது.

விரைவில் படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முன்பதிவு தொடங்கிவிட்டது. முன்பதிவில் படம் வசூல் செய்துள்ள கலெக்ஷன் குறித்து ஒரு விவரம் வலம் வருகிறது.

அதாவது ரன்பீர் கபூர்-சாய் பல்லவி நடித்துள்ள ராமாயணா படத்தின் முதல்நாள் முன்பதிவில் மட்டுமே படம் ரூ. 4.88 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.

இந்தியாவில் 3,536 ஷோக்களுக்கு 84,969 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம்.

Leave a Reply