• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் புதிய வீடியோவை வெளியிட்ட படக்குழு

சினிமா

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் வழங்கும் புதிய ஆன்மீகத் திரைப்படமான 'வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி' (World Of Mahasakthi) படத்தின் அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

முந்தைய பக்திப் படங்களின் பாணியில் இல்லாமல், அதிநவீன கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான பின்னணியில் இந்த ஆன்மீகக் காவியம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில் முதன்மை அம்மன் பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். அவருடன் துனியா விஜய், ரெஜினா கசான்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, 'கே.ஜி.எஃப்' புகழ் கருடா ராம், அபினயா உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து களமிறங்குகிறது.

வணிக ரீதியிலான திரைப்படங்கள் மற்றும் பக்தித் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்த சுந்தர்.சி இந்த மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார்.

படத்தின் விறுவிறுப்பான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்குப் பொறுப்பேற்று ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்க, குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகப் பங்களிக்கின்றனர்.

இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்திற்கு வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனம் எழுத, கோபிநாத் வேணுகோபால் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்; மேலும், ராஜசேகர் கே சண்டைப்பயிற்சி இயக்குநராகவும், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பாளராகவும், பி ஆர் வெங்கடேஷ் VFX தயாரிப்பாளராகவும் இணைந்து இந்த ஆன்மீகக் காவியத்தின் தொழில்நுட்பக் குழுவை வழிநடத்துகிறார்கள்.

பிரம்மாண்ட காட்சிகளுடன், ஆன்மீகமும் நவீன கிராபிக்ஸும் கைகோர்க்கும் இந்த 'வேர்ல்ட் ஆஃப் மகாசக்தி' திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படம் இந்தியத் திரையுலகில் ஒரு மிக முக்கிய ஆன்மீகத் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply