• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.  

இந்த விலை உயர்வு இன்று (21) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாகவே உணவக உரிமையாளர்கள் சில உணவுப் பொருட்களின் விலைகளை மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக இன்று (21) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டார்.

கூடுதல் செலவுகளை ஈடுகட்டும் வகையில், சிற்றுண்டிகளின் விலையைச் சற்று உயர்த்துவதற்குச் சங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply