• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கொண்ட ரஞ்சி

இலங்கை

துபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் கும்பல் ஒன்றின் உறுப்பினரான ‘கொண்ட ரஞ்சி’ என்று அழைக்கப்படும் ரஞ்சித் குமார இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஃப்ளைதுபாய் (Flydubai) விமானம் மூலம் அவர் இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது, ​​’கொண்டா ரஞ்சி’ ஜனவரி 9-ஆம் திகதி துபாயில் கைது செய்யப்பட்டார்.

அவருடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளையும் துபாய் பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

ஆனால், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் பொலிஸாரால் இவர் தேடப்பட்டு வருவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply