• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள்

இலங்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் பெருமளவான வெடி பொருட்கள் காணப்படும் நிலையில் அவற்றை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

பலாலி அந்தோனிபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது கிணற்றினுள் வெடி பொருட்கள் காணப்பட்டுள்ளன.

அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கிணற்றினுள் காணப்படும் வெடி பொருட்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மல்லாக நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply