• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேபாள மக்களுக்கு அவுஸ்திரேலியா 3.6 மில்லியன் டொலர் நிதியுதவி

இலங்கை

 இயற்கை பேரிடரால் எற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் மற்றும் அவுஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வொங் அறிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 469 ஆக அதிகரித்துள்ளது.

இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply