பிரான்ஸ் பேருந்து நிறுத்தத்தில் கூட்டம் மீது மோதியகார்- இருவர் உயிரிழப்பு 9 பேர் காயம்
இலங்கை
வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், புதன்கிழமை (26) மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அன்னாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குரித்த விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று துணை அரசு வழக்கறிஞர் பிலிப் லியோனார்டோ வியாழக்கிழமை அதிகாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திய ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என விவரிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர், புதன்கிழமை இரவு நகரின் பிரதான ரயில் நிலையம் அருகே மக்கள் கூட்டத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவலில் வைக்கப்பட்டார்.
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மற்றொருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தை அடுத்து ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் கைது செய்யப்பட்டார் என்று பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு ஒரு தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. தாக்குதலுக்குப் பிறகு, சந்தேக நபர் உளவுத்துறைக்கு அறிமுகமானவர் அல்ல என்றும், ஆனால் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு முன்பு காவல்துறையுடன் தொடர்பு இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






















