• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு ரயில் சேவையில் தாமதம்

இலங்கை

வடக்கு ரயில் பாதையில் ரயில் ஒன்று தடம் புரண்டதைத் தொடர்ந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொல்கஹவெலவிலிருந்து மஹாவ நோக்கிச் சென்ற ரயில் ஒன்று பொத்துஹெர ரயில் நிலையத்தில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடம் புரண்ட சம்பவத்தால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, பொத்துஹெர ரயில் நிலையத்தைத் தாண்டிச் செல்லவிருக்கும் அனைத்து ரயில்களின் சேவையிலும் தாமதம் ஏற்படும் என்றும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 
 

Leave a Reply