யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியில் விபத்து
இலங்கை
யாழ்ப்பாணம் – கண்டி (A9) பிரதான வீதியின் மருதன்கடவலை மிதிவத்த பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து, வீதியின் வலதுபுறமாகத் திரும்ப முயன்ற லொறியின் பின்புறத்தில் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (21) இடம்பெற்ற இவ்விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து கெகிராவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் மருதன்கடவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.























