அமெரிக்காவில் டிக்டொக் செயலி தடை நீக்கம்
அமெரிக்காவில் அரச அலுவலகங்களுக்குச் சொந்தமான சாதனங்களில் டிக்டொக் செயலியைப் தரவிறக்கம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க நீதித் திணைக்களம் நீக்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு நலன் கருதி அரச சாதனங்களில் டிக்அடொக் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது டிக்டாக்கின் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance), அதன் அமெரிக்க பயனர் தரவு மற்றும் செயல்பாடுகளை 'டிக்டொக் யுஎஸ்டிஎஸ்' (TikTok USDS) எனும் கூட்டு நிறுவனத்துக்கு மாற்றியுள்ளதால், இந்தத் தடை நீக்கப்படுவதாக நீதித் திணைக்களம் அறிவித்துள்ளது.
டிக்டொக்கின் அல்கரிதம் மற்றும் தரவுகள் அமெரிக்காவின் ஒரக்கிள் (Oracle) கிளவுட் மூலம் பாதுகாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையை நீக்குவது தொடர்பான முடிவை அந்தந்த அமைப்புகளின் விருப்பத்துக்கேற்ப மேற்கொள்ளலாம் என்றும், தற்போதைய நிலையில் டிக்டொக் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இல்லை என்றும் நீதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.






















