• Welcome to TamilsGuide
செய்திகள் 1

5 ஆயிரத்தை நெருங்கும் வெனிசுலா உயிரிழப்புக்கள்

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் 5 ஆயிரத்தை நெருங்குகின்றது. இதன்படி, இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தினால் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,740 ஆக பதிவாகியுள்ளது. அத்துடன், நிலநடுக்கத்தால் வீடுகளை முழுமையாக இழந்தவர்களின் எண்ணிக்கை 17,907 ஆக தொடர்ந்தும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply