• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரான் போர் நீடிக்க இஸ்ரேல் சதி - அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

ஈரானுடனான போர் தொடர வேண்டும் என இஸ்ரேல் அரசில் சிலர் விரும்புகின்றனர் என்று அமெரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. 

இந்த சூழலில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்,  ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ஈரானுடன் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தையை தடுக்கும் வகையிலும், போர் ஆனது காலவரையின்றி தொடர்ந்து நீடிக்கவும் இஸ்ரேல் அரசில் உள்ள சிலர் விரும்புகின்றனர்.

சில குறிப்பிட்ட சக்திகள் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவும் செய்கின்றன என பகிரங்க குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார். அமெரிக்கர்களின் எண்ணங்களை போருக்கு ஆதரவாக திசை திருப்பும் வகையில், திரித்தும், மாற்றவும் முயற்சித்து வருகின்றனர்.

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அது எங்களுக்கு தெரிகிறது. அதற்கு இஸ்ரேல் ரகசியமாக நிதியுதவி அளித்து வருகிறது என்றும் பேசியுள்ளார்.

இந்த நிதியை பெற்றுக்கொண்டு நேர்மையற்ற வகையில், சிலர், ஆன்லைன் வழியே என்னையே தாக்கி பேசி வருகின்றனர்.

ஆனால், அமெரிக்க மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனையே நான் செய்ய போகிறேன். அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலேயே நான் செயல்பட போகிறேன் என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply