• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உலகக் கிண்ண போட்டியில் தோல்வி - பிரான்ஸில் வெடித்த கலவரம்

உலகக் கிண்ண உதைபந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோற்றதைத் தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்துள்ளது. உலகக் கிண்ண உதைபந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெயின் - பிரான்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றிபெற்றது. கடந்த உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி, இம்முறை அரையிறுதியில் தோற்று வெளியேறியது.

ஸ்பெயின் அணியின் சிறப்பான தடுப்பாட்டம், பிரான்ஸ் அணியின் திட்டமிடலின் போதாமை போன்ற காரணங்களால் இந்தப் போட்டியில் பிரான்ஸ் தோற்றது. பிரான்ஸ் அணியின் தோல்விக்குப் பின்னர் அந்நாட்டின் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.

தோல்வியால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வாகனங்களைச் சேதப்படுத்தி, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.

பிரான்ஸின் தலைநகரான பாரீஸ் நகரிலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கலைத்ததால் அங்க்கு  பதற்றம் மேலும் அதிகரித்ததாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 

Leave a Reply