உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23
இலங்கை
வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதா என்பது குறித்த தனது தீர்ப்பை, எதிர்வரும் ஜூலை 23 அன்று அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) தெரிவித்தது.
குறித்த பரீட்சைக்குத் தோற்றத் தயாராகி வரும் மாணவர் குழுவொன்றினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுதாரர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர், ஜூலை 23 அன்று தீர்ப்பை அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தீர்மானித்தது.





















