• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை

தேசியப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பங்கள் ஜூலை 16 முதல் ஜூலை 30, 2026 வரை தேசியப் பாடசாலை ஆசிரியர் இடமாற்ற (NSTT) இணையத் தளத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள், தங்களது விண்ணப்பத்தை இணையவழியில் பூர்த்தி செய்து அதன் அச்சுப் பிரதியைப் பெற்று, தங்களது சம்பளம் வழங்கப்படும் பாடசாலையின் அதிபரிடம் 2026 ஜூலை 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அச்சிடப்பட்ட விண்ணப்பம் சம்பந்தப்பட்ட பாடசாலை நிர்வாகத்தின் ஊடாக இடமாற்ற நடைமுறைக்காக அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நேரடியாக கையளிக்கும் அல்லது தபால் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும், தகுதியுடைய அனைத்து ஆசிரியர்களும் இணையவழி முறையை மட்டுமே பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை பின்பற்றுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

அமைச்சின் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக தேசியப் பாடசாலைகளுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றங்களை எளிதாக்கும் நோக்கில் இந்த வருடாந்த மற்றும் கட்டாய இடமாற்றத் திட்டம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply