• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை

இலங்கை

கொழும்பு மாநகர சபை (CMC) பொழுதுபோக்கு வரியை திருத்தி குறைக்கும் வகையில் புதிய வரி விகிதங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது.

திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் இந்த புதிய வரி விகிதங்கள் அங்கீகரிக்கப்பட்டதுடன், தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவை அமலுக்கு வந்துள்ளன.

புதிய வரி திருத்தங்களின்படி, உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கான பொழுதுபோக்கு வரி 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.

மேலும், திரைப்பட டிக்கெட்டுகளுக்கு 7 சதவீத பொழுதுபோக்கு வரியும், உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளுக்கு 7 சதவீத வரியும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பொதுமக்கள் பொழுதுபோக்கு, கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை அதிகளவில் அனுபவிக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, இலங்கையின் படைப்பாற்றல் துறையையும் ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதாக கொழும்பு மாநகர முதல்வர் வ்ரே காலி பால்தசார் (Vraie Cally Balthazaar) தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரிக் குறைப்பின் பயனை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், இயன்றவரை நிகழ்ச்சி டிக்கெட் விலைகளையும் குறைக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

Leave a Reply