• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மத்திய கிழக்கு பதற்றம் - 8,000 வீரர்களுடன் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட போர் விமானங்கள்

இலங்கை

பாகிஸ்தான் தன் நட்பு நாடான சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக 8,000 ராணுவ வீரர்கள், போர் விமானங்கள் மற்றும் அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்காசிய நாடான சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, தாக்குதல்கள், போரின்போது பரஸ்பரம் இரு நாடுகளும் ராணுவ உதவிகளை செய்யும்.

தற்போது மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தால், பாகிஸ்தான் தன் படைகளை சவுதி அரேபியாவுக்கு அனுப்பியுள்ளது.

சீனாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட 16 ஜே.எப்., -17 ரக போர் விமானங்கள், இரண்டு ட்ரோன் படைப் பிரிவுகள் மற்றும் சீன தயாரிப் பான அதி நவீன ஏவுகணை தடுப்பு அமைப்பு ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், 8,000 வீரர்களையும் அனுப்பியுள்ளது. இதற்காகும் செலவுகளை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ளது.
 

Leave a Reply