• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முள்ளம்பன்றியைக் கொன்று இறைச்சியாக்கிய சந்தேக நபர் கைது

இலங்கை

கந்தளாய், வென்றாசன்புர பகுதியில் உள்ள வீடொன்றில் முள்ளம்பன்றி ஒன்றைக் கொன்று இறைச்சியாக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குழுவினர் நேற்று நடத்திய சோதனையின்போது, முள்ளம்பன்றியைக் கொன்று இறைச்சியாக்கிக் கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 10 கிலோ கிராம் இறைச்சி மற்றும் மான் கொம்பினால் செய்யப்பட்ட கத்தி உள்ளிட்ட உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதாக கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நேற்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதினை தொடர்ந்து, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு மீண்டும் வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
 

Leave a Reply