• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருதமுனை நகர சபை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இலங்கை

மருதமுனைக்கு தனியான நகர சபையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுள்ளாஹ் அவர்களுடன் அவரது முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மருதமுனைக்கான நகர சபையை சாத்தியப்படுத்துவதற்கான முன் ஆயத்த வேலைத்திட்டங்கள், சட்ட மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இந்நடவடிக்கைகளின் அடுத்த கட்ட செயற்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

இக்கலந்துரையாடலில் மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தின் உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேவேளை, சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வழக்கில் இடைமனுதாரர்களாக மருதமுனை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

Leave a Reply