• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை

இலங்கை

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை இல்லம் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் ;மல்வானை பகுதியில் உள்ள வீடு நீதிமன்ற நடவடிக்கை ஊடாக அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள பிண்ணனயில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் கடந்த 14 ஆம் திகதி பலவந்தமாக கைற்றப்பட்டது

இதற்கமைய அவர்கள் தொடர்ச்சியாக அங்கு தங்கியிருக்கின்றனர்.

மாணவர்கள் கடந்த 2 நாட்களாக அங்கு இரவுப்பொழுதினை கழித்த நிலையில் காலைவேளையில் உணவுதயாரப்பில் ஈடுபட்டதனையும் அவதானிக்க முடிந்தது.

தங்களால் முற்றுகையிடப்பட்ட இடத்தினை பல்கலைக்கழகத்திற்கு உரித்தாக்கும் வரை தாங்கள் குறித்த இடத்தில் இருந்து வெளியேறப்போவதில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்
 

Leave a Reply