திமுக - அதிமுக கூட்டணிக்கு முயன்றேனா? - ரஜினிகாந்த் விளக்கம்
சினிமா
சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிறகு திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* எம்ஜிஆர், என்டிஆர் செய்யாத சாதனைகளை முதலமைச்சர் விஜய் செய்துள்ளார்.
* மத்தியில் பாஜக, தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றுள்ளார் முதலமைச்சர் விஜய்.
* தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். தவெக தொண்டர்கள் செய்யும் சிறு தவறு கூட விஜயை பாதிக்கும்.
* விஜய் முதல்வராகக்கூடாது என நான் முயற்சித்ததுபோல் விமர்சனம் வெளியானது.
* விஜய் மீது எனக்கு பொறாமை என பரப்புகின்றனர். விஜய் வெற்றி பெற்ற பின் எக்ஸ் தளத்தில் வாழ்த்தினேன்.
* சினிமாவில் இருந்து விஜய் முதலமைச்சரானது எனக்கு பொறாமை இல்லை. ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.
* நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வென்றிருப்பேன். மாற்றம் வேண்டும் என மக்கள் நினைத்த சமயத்தில் விஜய் வந்துள்ளார்.
* விஜய் முதலமைச்சராக கூடாது என்று திமுக - அதிமுக கட்சிகளை ஒன்று சேர்க்க முயற்சிக்க சொல்லும் அளவுக்கு நான் தரங்கெட்டவன் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






















