• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல் வெளியானது

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என தனது திறமைகளை வளர்த்துக் கொண்டே செல்கிறார். சிவகார்த்திகேயன் பல பாடல்களை பாடி நாம் கேட்டுள்ளோம்.

இந்நிலையில் அவரது வரிகளில் ஒரு பக்தி பாடல் வெளியாகி உள்ளது. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் வகையில் ‘வேலும் மயிலும்’ என்ற ஆல்பம் பாடலை அவர் எழுதி, அவரது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தை இயக்கும் சிவக்குமார் முருகேசன் இப்பாடலையும் இயக்கியுள்ளார். 
 

Leave a Reply