• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கீரீன்லாந்து பக்கம் திரும்பிய ட்ரம்ப் - வெளியான பதிவால் புதிய சர்ச்சை

ஈரான் போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கத் தவறியதற்காக நேட்டோவை ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ அமைப்பு ஆதரவு அளிக்கவில்லை. மீண்டும் தேவைப்பட்டாலும் அவர்கள் ஆதரவாக இருக்க மாட்டார்கள்.

கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள். பனி படர்ந்த அந்த நாடு, மோசமாக நிர்வகிக்கப்படுகிறது என ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மீதான போரில் அமெரிக்காவிற்குப் போதிய ஆதரவு அளிக்காததால், நேட்டோ (NATO) நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

நட்பு நாடுகள் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும், நேட்டோவில் இருந்து விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். 
 

Leave a Reply