• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வியாழன் பேச்சுவார்த்தை- வேலைநிறுத்தத்தை கைவிட்ட GMOA

இலங்கை

சுகாதார அமைச்சருடன் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நடைபெற்று வரும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

மருத்துவர்களின் இடமாற்றங்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்குப் பிந்தைய நியமனங்கள் தொடர்பான கவலைகள் காரணமாக இந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது. 

எனினும், இந்த வேலைநிறுத்தங்களின் போது மருத்துவமனைகளில் அவசர சேவைகள் தொடர்ந்து இயங்கின.

இந்த நிலையில் தொழிற்சங்க நடவக்கைகளை தீர்வுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த சுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக GMOA தெரிவித்துள்ளது. 

தொழிற்சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் GMOA குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த வேலைநிறுத்தம் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 

இடமாற்றச் செயல்முறை தொடர்பான கவலைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறிவிட்டதாக GMOA குற்றம் சாட்டிய நிலையில், நியமனச் செயல்முறை திட்டமிட்டபடி தொடர வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியது.
 

Leave a Reply