சட்டவிரோதமாக டீசாலை சேமித்து வைத்திருந்த இருவர் கைது
இலங்கை
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக டீசலை சேமித்து வைத்திருந்ததற்காக, கொழும்பு பிரிவு குற்றப்பிரிவினரால் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தை பகுதியில் நேற்று (05) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, அதிகாரிகள் 826 லிட்டர் டீசலையும், அங்கீகரிக்கப்படாத எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 72,210 ரூபாவையும் பறிமுதல் செய்தனர்.
கைதான சந்தேக நபர்கள் வெள்ளவத்தை, வரியபொல பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 61 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு பிரிவு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






















