• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அவரை இழந்தது என் பலவீனம்- தனுஷ் உடனான நட்பு முறிவு குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம்... 

சினிமா

தனுஷ் தயாரிப்பில் 'நானும் ரவுடிதான்' படத்தை இயக்கி திரையுலகில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்து வாக்குல ரெண்டு காதல்' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

முன்னணி நடிகையான நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதன் - கீர்த்தி ஷெட்டி நடிப்பில் இயக்கியுள்ள 'எல்.ஐ.கே.' படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் தனுஷ் உடனான நட்பு குறித்து விக்னேஷ் சிவன் மனம் திறந்தார்.

விக்னேஷ் சிவன் கூறியதாவது:-

தனுசை எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் என்பதை தாண்டி அவரை நான் உச்சத்தில் வைத்திருக்கிறேன். ஆனால் அவருடன் எனது நட்பு முறிந்து போனதை மிகப்பெரிய இழப்பாக பார்க்கிறேன். நல்ல நட்பு கொண்ட ஒரு உறவை இழந்ததை பலவீனமாகவும் கருதுகிறேன்.

ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு தவறை செய்திருக்கிறேன். அதனால்தான் இந்த நட்பு தொடரவில்லையோ என்று கவலைப்படுகிறேன். இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருக்க காரணமே தனுஷ் தான். அதை மட்டும் என்றும் மறக்க மாட்டேன்.

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவன், நயன்தாரா, தனுஷ் இடையே நல்ல நட்பு நீடித்தது. திடீரென இவர்கள் நட்புக்குள் விரிசல் விழுந்தது. நயன்தாரா தனது திருமண ஆவணப்படத்தில் 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு சம்பந்தமான சில காட்சிகளை சேர்த்திருந்தார்.

தயாரிப்பாளரான தனது அனுமதி இல்லாமல் இப்படி செய்யக்கூடாது என்று தனுஷ் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்தார். அப்போது முதலில் இருவர் இடையே முட்டல்-மோதல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் உடனான நட்பு குறித்து விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


 

Leave a Reply