• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்றும் தொடரும் அரச மருத்துவ அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

இலங்கை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA) தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (05) காலை 8 மணி முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் தலையீட்டின் அடிப்படையில் வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த வேலைநிறுத்தத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி, நாடு தழுவிய அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று காலை 8.00 மணி முதல் இந்த வேலைநிறுத்தத்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகமை அபேக்ஷா வைத்தியசாலை, சிறப்பு சிறுநீரகப் பிரிவுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் போன்ற வைத்தியசாலைகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவிலலை என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான அடுத்த கட்ட நகர்வு தொடர்பில் இன்று நடைபெறும் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply