• Welcome to TamilsGuide
செய்திகள் 1

46,650 மெட்ரிக் டன் LPG-யுடன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்த இந்திய கப்பல்

ஈரான் போரினால் பதற்றம் நிலவிவரும் மத்திய கிழக்கில் இருந்து இந்தியக் கொடியுடன் கூடிய 'கிரீன் சான்வி' என்ற எரிவாயு கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்து இந்தியா நோக்கி வந்துகொண்டிருக்கிறது.

சுமார் 46,650 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயுவை சுமந்து வரும் இந்தக் கப்பல், ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை எந்தத் தடங்கலும் இன்றி கடந்துள்ளது. இது இன்னும் சில நாட்களில் இந்தியாவை வந்தடையும்.

இதற்கு முன்பாக கடந்த மார்ச் 28 அன்று, 47,000 மெட்ரிக் டன் பெட்ரோலிய எரிவாயுவுடன் வந்த மற்றொரு கப்பல் குஜராத்தின் வாதினார் முனையத்தை வந்தடைந்தது.

இதுவரை இந்தியக் கொடியுடன் கூடிய 8 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளன.இன்னும் 15 கப்பல்கள் அந்தப் பகுதியில் உள்ளன.

Leave a Reply