வளைகுடா போர் பதற்றங்கள் - முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள்
வளைகுடா போர் பதற்றங்களுக்கு மத்தியில் முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (3) ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடான பிரான்ஸை, ஈரான் ஒரு எதிரி நாடாகக் கருதவில்லை என்பதையே இது காட்டுகிறது என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தமது கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணிக்க அனுமதி கிடைக்கும் என பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கையுடனும் அமைந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரசா லாசரோ குறிப்பிட்டார்.
இதன் மூலம் பிலிப்பைன்ஸ் கொடியுடன் கூடிய கப்பல்கள், எரிசக்தி வளங்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் மாலுமிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை வழங்க ஈரான் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






















