• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை

இலங்கை

கொழும்பின் பல பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் வெட்டு கால அளவை மேலும் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நீர் வெட்டினை 12 அல்லது எட்டு மணி நேரமாக மட்டுப்படுத்துவது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக NWSDB இன் தலைவர் பொறியாளர் சந்தன பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக ஏற்பட்ட நீர் விநியோகத் தடைகளால் பாதுக்கை, ஹோமாகமை, பெலன்வத்தை மற்றும் பன்னிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர் விநியோகத்தை நிறுத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகளின் கால அளவு 24 மணி நேரத்திலிருந்து 18 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று நேற்று (3) அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே அந்த நீர் வெட்டுக் காலத்தை 12 அல்லது எட்டு மணி நேரமாகக் குறைப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தன பண்டார குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply