ஈராக்கில் அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தொடர் தாக்குதல்
ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ நிலைகளை இலக்கு வைத்து கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சராயா அவ்லியா அல்-தாம் (Saraya Awliya al-Dam) என்ற ஆயுதக் குழு அறிவித்துள்ளது.
சராயா அவ்லியா அல்-தாம் (Saraya Awliya al-Dam) ஆயுதக் குழு, டெலிகிராம் பக்கத்தில் இந்ததகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த ஆயுதக்குழு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களே இலக்கு வைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை இந்தத் தாக்குதல்கள் குறித்த மேலதிக விபரங்களையோ அல்லது பாதிப்புகளையோ ஈராக் காவல்துறை தரப்போ அல்லது அமெரிக்கத் தரப்போ இதுவரை உறுதிப்படுத்தவில்லை என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.























