கிளிநொச்சியில் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான பாலை மரக்குற்றிகள் பொலிஸாரால் மீட்பு
இலங்கை
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு இன்று 19 கிடைத்த இரகசிய தகவலின் படி ஏ 35 பிரதான வீதி ஊடாக அதிகாலையில் தர்மபுர பொலிஸார் புளியம்பொக்கணை பகுதியில் திடீர் வீதிச் சோதனைகள் மேற்கொண்டபோது சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பாலை மரக்குற்றிகள் எந்தவித அனுமதிப்பத்திரம் இன்றி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு சென்ற வேளையில் மடக்கி பிடிக்கப்பட்டது.
இதேவேளை, இவ் மரக்குற்றிகள் மற்றும் கனரக வாகனத்தின் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேபோன்று இரண்டு நாட்களுக்கு முன்பு கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி பிரிவினரால் முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி காட்டுப்பகுதியில் மூன்று உழவு இயந்திரத்தில் காட்டு மரங்கள் ஏற்றிய வாரு பொலிஸ் விசேட அதிரடி பிரிவினரால் பிடிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த சுமார் 40 லட்சம் ரூபாய் பெறுமதி மிக்க பாலை மரக்குற்றிகள் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுர பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் பாலை மரக்குற்றிகள் இன்று கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்






















