• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலவரையின்றி மூடப்பட்டUAE விமான நிலையங்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

துபாய் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால், பாதுகாப்பு கருதி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வான்பரப்பையும் மூடுவதாக ஐக்கிய அரபு அமீரக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த திடீர் அறிவிப்பால் ஆயிரக்கணக்கான சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டதால் உலகளாவிய போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஈரானின் இந்த தாக்குதல் வளைகுடா நாடுகளின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் நேரடி தாக்குதலாக பார்க்கப்படுகிறது.

போர்ச் சூழல் தணிந்தால் மட்டுமே மீண்டும் விமானச் சேவைகள் தொடங்கும் என்பதால் பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply