மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு
இலங்கை
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான இரண்டு நாள் கொண்ட பயங்கர வாத சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
கிழற்கு சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் புகாரி முகம்மட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வின் போது, இலங்கையில் நீண்டகாலமாக விவாதத்திற்குள்ளாகி வரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அரசாங்கத்தால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசாங்கத்தை பயங்கர வாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
இலங்கையின் தற்போது நடைமுறையிலுள்ள ‘பயங்கரவாதத் தடைச் சட்டம், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் சமவாயம், போன்ற பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
இதன் போது பிரபல சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் வளவாளராகக் கலந்துகொண்டு, விளக்கமளித்தார்.
அடிப்படை உரிமைகள், அதன் முக்கியத்துவம், உரிமைகள் மீறப்படுதல், அதனைப் பாதுகாக்கும் சட்ட ரீதியான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.
ஊடகவியலாளர்கள், மினித உரிமை ஆர்வலர்கள், களப்பணியில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான சட்டப் பாதுகாப்பு குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இலங்கையில் அடிப்படை சுதந்திரம் ஜனநாயக தளம் , அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது சிவில் சமூகமாக அதனை எவ்வாறு பாதுகாப்பது, மற்றும் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்தி அதனை மேம்படுத்துவது போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன























