• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கிளிநொச்சி எல்லைப்பகுதியான விசுவமடு தொட்டியடி பகுதியில் நீண்ட நாட்களாக சட்டவிரோதமான முறையில் யானை வேலிகளையும் சேதப்படுத்தி முதிரை மரக்குற்றிகளை கொண்டு செல்கின்ற நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றையதினம் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவதற்காக தயார் நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 லட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட முதிரை குற்றிகளும் மூன்று உழவு இயந்திரங்களும் வனஜீவராசிகள் திணைக்ளத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது சந்தேக நபர்கள் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
 

Leave a Reply