தங்கப் பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் - தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திடீர் வீழ்ச்சி
இலங்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (15) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக உயர்வை நோக்கிச் சென்ற ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை இன்று 5,020 டொலராகக் குறைந்துள்ளது.
இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க சரிவாகும்.
அதேபோன்று வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் வெள்ளி 80.61 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை ஆய்வாளர்களின் கருத்துப்படி, அமெரிக்க டொலரின் மதிப்பு வலுவடைந்துள்ளமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் நிச்சயமற்ற போர்ச் சூழலால் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டு உத்திகளை மாற்றி அமைத்துள்ளமை இந்தப் பாதிப்பிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.
அத்துடன், அமெரிக்காவின் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் உலோகச் சந்தையில் இந்தத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.























