• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈரானின் புதிய உச்ச தலைவர் தலைக்கு 10 மில்லியன் அறிவிப்பு - வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்

ஈரானின் புதிய உச்ச தலைவர் பதுங்கியுள்ள இடத்தை காட்டிகொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டொலர் வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை வளைகுடா போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மற்றும் அந்நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உயர்மட்டத் தலைவர்கள் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி வெகுமதி வழங்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து முன்னெடுக்கும் போருக்காக மேலதிகப் படைகள், கரையோர பாதுகாப்பு சிப்பாய்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பவும் அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள கார்க் தீவில் உள்ள பல இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply