• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணக்காரப் பாத்திரத்தில் சிவாஜி அளவிற்கு வெரைட்டியாக வேறு நடிகர்கள் செய்திருக்கிறார்களா என்பது சந்தேகமே....

சினிமா

பணக்கார வேடம் போட்ட உடனேயே அந்த மிடுக்கு , தோரணை, கம்பீரம் , லேசான கர்வம் அனைத்தும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடும் அவரிடம்.

குற்ற உணர்ச்சியில் தவித்து மருகி, நண்பன் துரோகம் செய்கிறான் என்று வெதும்பி, சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம் என்று மரண விளிம்பு தொடும் ‘ஆலயமணி’ சிவாஜியும் பணக்காரர்தான். அப்பாவின் சொல்லை மீறமுடியவில்லை, காதலித்தவளை கரம்பிடிக்கமுடியவில்லை என்று இன்னொருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுக்கும் நேர்மையாக, காதலியின் நினைவுகளிலும் மூழ்கி, மிடுக்குடனும் தவிப்புடனும் இருக்கிற ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜியும் பணக்காரர்தான். இரண்டு மகள்களையும் கண்களாக பாவிப்பதும், இதில் ஒருத்தி தன் மகளில்லை என்று தெரிந்து வெறுப்பதும், அதனால் அப்படியே புறக்கணிப்பதும், அந்தஸ்து போய்விடுமே என்று பதறுவதும் இவள் மகளா, அவள் மகளா என்று தவித்துக் கலங்குவதும், இறுதியில் கெளரவத்தை விட அன்பும் பிரியமுமே சாஸ்வதம் என்று புரிந்துகொள்வதுமாக இருக்கிற ‘பார் மகளே பார்’ சிவாஜியும் பணக்காரர்தான்.

வசந்தமாளிகையில்..ஒரு பணக்காரர், அவன் தான் மனிதனில் வேறு வகை , புதிய பறவையில் ஒரு ஸ்டைலிஷ் பணக்காரர்...என்று ஒரே பாத்திரம் அவர் நடிப்பால் வெவ்வேறு கோணங்களில் பரிணமிக்கிறது.

பிராவகமாய் பொங்கிப் பாயும் அந்த நடிப்பு அருவியை பாத்திரம் என்னும் ‘பணக்கார’ சொம்புக்குள் அடைத்து விட முடியாது என்பதே உண்மை.பணக்காரப் பாத்திரத்தில் சிவாஜி அளவிற்கு வெரைட்டியாக வேறு நடிகர்கள் செய்திருக்கிறார்களா என்பது சந்தேகமே....பணக்கார வேடம் போட்ட உடனேயே அந்த மிடுக்கு , தோரணை, கம்பீரம் , லேசான கர்வம் அனைத்தும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடும் அவரிடம்.

குற்ற உணர்ச்சியில் தவித்து மருகி, நண்பன் துரோகம் செய்கிறான் என்று வெதும்பி, சொத்தும் வேண்டாம் சுகமும் வேண்டாம் என்று மரண விளிம்பு தொடும் ‘ஆலயமணி’ சிவாஜியும் பணக்காரர்தான். அப்பாவின் சொல்லை மீறமுடியவில்லை, காதலித்தவளை கரம்பிடிக்கமுடியவில்லை என்று இன்னொருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுக்கும் நேர்மையாக, காதலியின் நினைவுகளிலும் மூழ்கி, மிடுக்குடனும் தவிப்புடனும் இருக்கிற ‘உயர்ந்த மனிதன்’ சிவாஜியும் பணக்காரர்தான். இரண்டு மகள்களையும் கண்களாக பாவிப்பதும், இதில் ஒருத்தி தன் மகளில்லை என்று தெரிந்து வெறுப்பதும், அதனால் அப்படியே புறக்கணிப்பதும், அந்தஸ்து போய்விடுமே என்று பதறுவதும் இவள் மகளா, அவள் மகளா என்று தவித்துக் கலங்குவதும், இறுதியில் கெளரவத்தை விட அன்பும் பிரியமுமே சாஸ்வதம் என்று புரிந்துகொள்வதுமாக இருக்கிற ‘பார் மகளே பார்’ சிவாஜியும் பணக்காரர்தான்.

வசந்தமாளிகையில்..ஒரு பணக்காரர், அவன் தான் மனிதனில் வேறு வகை , புதிய பறவையில் ஒரு ஸ்டைலிஷ் பணக்காரர்...என்று ஒரே பாத்திரம் அவர் நடிப்பால் வெவ்வேறு கோணங்களில் பரிணமிக்கிறது.

பிராவகமாய் பொங்கிப் பாயும் அந்த நடிப்பு அருவியை பாத்திரம் என்னும் ‘பணக்கார’ சொம்புக்குள் அடைத்து விட முடியாது என்பதே உண்மை.

Bala Subramanian
 
Leave a Reply