22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மன்மதன் - ஷாக்கான பொலிஸார்
இந்தியா
கேரளாவின் 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மன்மதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருட்டு வழக்கு ஒன்றில் கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , சந்தேக நபர் 22 பெண்களை ஏமாற்ரி திருமணம் செய்தமை வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அனைத்து மாவட்டங்களிலும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்தவர்களை குறிவைத்து திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண மன்னனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை மர்ம ஆசாமி பறித்துச் சென்ற நிலையில் அது தொடர்பில் முன்னெடுக்கபப்ட்ட விசாரணையிலே சந்தேக நபர் 22 திருமண செய்த சம்பவம் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது,
பாகுலேயன் , கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து வந்துள்ளார். இவ்வாறு திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி மணமுடித்துள்ளார்.
ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் தனது பெயரை மாற்றி மாற்றி கூறி லீலைகளை அரங்கேற்றி வந்துள்ளார். அதன்படி இவருக்கு தாஸ், பாபு, சுந்தரன், ராஜன், விஜயன், கல்யாணராமன் என பல பெயர்கள் உள்ளன.
மேலும் தனது மனைவிகளை திருப்திபடுத்தவும். அவர்களுக்கு விதவிதமாக நகைகளை அணிவித்து அழகு பார்க்கவும் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகளை குறி வைத்து கைவரிசை காட்டியுள்ளார்.
பாகுலேயன் மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன போன்ற தகவல்கள் பொலிஸ் விசாரணை மூலம் அம்பலமானது. இதையடுத்து பாகுலேயனை பொலிஸார் ஆற்றிங்கல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பலே ஆசாமி 22 பெண்களை மணந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















