மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துஆய்வு
இலங்கை
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து ,கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள கடற்கரைப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் , அங்கு மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கிராம மக்களுடன் கலந்துரையாடினார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் அழைப்பினை ஏற்று, விஜயம் செய்த அமைச்சர் மீனவர்களுடான சந்திப்பினையும் மேற்கொண்டார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபை உறுப்பினர் ச.கணேசநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பெரியகல்லாறு பகுதியில் உள்ள ஆற்றுவாய் பகுதியில் நீண்டகாலமான மீனவர்கள் கோரிவரும் மீனவர் துறைமுகம் அமைத்தல் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் கரைவலை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கேட்டறிந்துகொண்ட அமைச்சர், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகளை காணுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.























