ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க வீரர்கள்? மறுக்கும் அமெரிக்கா
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்கள் ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.
முன்னதாக, ஈரான் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் அலி லாரிஜானி இதனை தெரிவித்திருந்தார்.
அமெரிக்க வீரர்கள் சிலர் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.ஆனால், அவர்கள் போரில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா பொய்ப் பிரசாரம் செய்கிறது. உண்மையை நீண்ட காலம் மறைக்க முடியாது," என லாரிஜானி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
எனினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்க கடற்படை மற்றும் மத்திய கட்டளை மையம் முற்றாக மறுத்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களின் உடல்கள் அமெரிக்காவின் டோவர் வான் படை தளத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் அமெரிக்கர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இந்தப் போர் அமெரிக்க மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது. 56 சதவீத அமெரிக்கர்கள் இந்தப் போரை எதிர்ப்பதாக அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.























