புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள்
சினிமா
புரட்சித்தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் 1977 - 1987 :
#புதிய_நகரங்கள்_அமைப்பு :
#மறைமலை_நகர் :
சென்னையிலிருந்து 43 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1375 எக்டேர் நிலப்பரப்பில் ஒரு லட்சம் மக்களுக்கென எல்லா வசதிகளுடன் கூடிய மறைமலை நகர் என்ற புதிய நகர் ஒன்றை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கியது. ஏறக்குறைய 600 எக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு 85 எக்டேர்களில் வீடுகளும் 202 எக்டேர்களில் தொழிற்சாலை மற்றும் அதை சார்ந்த பணிகள் அமைக்கப்பட்டன. பின்னர் 24 எக்டேர்களில் வீடுகளும் 16 எக்டேர்களில் தொழிற்சாலைகளுமாக விரிவுபடுத்தப்பட்டது.
1987 வரை , 1282 மனைகளும் , 1632 வீடுகளும் முடிக்கப்பட்டு மக்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன. 820 மனைகளுக்கான வேலைகள் அதன்பின் மேற்கொள்ளப்பட்டன. 1986 முடிய ஏறக்குறைய 1300 குடும்பங்கள் இந்த இடத்தில் குடியேறியுள்ளன.
#மணலியில்_75_ஆயிரம் #குடும்பங்களுக்கு_வீடுகள் :
சென்னை பொன்னேரி சாலையில் சென்னையில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மணலியில் ஏறக்குறைய 1000 எக்டேர் நிலப்பரப்பில் 75,000 குடும்பங்களுக்கான எல்லா வசதிகளுடன் கூடிய வீட்டு வசதி திட்டம் ஒன்றையும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் உருவாக்கியது. இதே பகுதியில் 60 எக்டேர்களில் உலக வங்கியின் உதவியுடன் தன்னிறைவுத் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. மொத்தம் 3820 மனைகளும் , 1760 வீடுகளும் இங்கு உருவாக்கப்பட்டன.
#இரும்பு_வியாபாரத்திற்கு_தனி #இடம் :
பின்னர், ஜார்ஜ் டவுனில் போதுமான வசதிகளின்றி இயங்கி வந்துகொண்டிருந்த இரும்பு மற்றும் எஃகு வியாபாரத்தைச் சாத்தான்காடு என்ற இடத்தில் , 106 ஏக்கர் நிலப்பரப்பில் மேலான வசதியுடன் கூடிய நவீன மார்க்கெட் ஒன்றை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைத்தது.
65,000 குடிசைப் பகுதி வாழ் மக்களுக்கு
அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது.
நில உரிமை மற்றும் வீடுகட்ட - மேம்பாடு செய்யக் கடனுதவி வழங்கப்பட்டது.
350 சிறு தொழிற்சாலைகள் மற்றும் 47 குடிசைத்தொழில் நிறுவனங்களின் மூலம் 9,000 ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டது.
350 பகல் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் 22 மருத்துவ மையங்கள் மூலம் குடிசைப் பகுதியில் வாழ்ந்து வந்த தாய்மை எய்திய பெண்டிதர் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
தரணி போற்றும் " தன்னிறைவுத் திட்டம் "
தந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு :
#மாற்றி_அமைக்கப்பட்ட_பெருநகர் #வளர்ச்சி_குழுமம் " :
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 1972 ஆம் ஆண்டு தற்காலிக அமைப்பாக நிறுவப்பட்டு 1975 ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அமைப்பாக மாற்றப்பட்டது. நீண்டகால திட்டமிடுதல் , சென்னை பெருநகர் பகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் தயாரித்தல் போன்றவை இக்குழுமத்தின் முக்கிய பணிகளாகும்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் , 1978 ஆம் ஆண்டு முதல் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. 2 பல்துறை சென்னை நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை ஒருமுகப்படுத்தி கண்காணித்து வருவதற்காக இது, மாற்றி அமைக்கப்பட்டது.
அரும்பாக்கம், வில்லிவாக்கம், கொடுங்கையூர், முகப்பேர் , மதுரவாயில் மற்றும் மணலிப் பகுதிகளில்
தன்னிறைவுத் திட்டங்கள் மூலம் 50,500 நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கு மனை மற்றும் வீடுகள் வழங்கப்பட்டன.
63,000 குடிசைப் பகுதி வாழ் குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது. நில உரிமை மற்றும் வீடுகட்ட மேம்பாடு செய்ய கடனுதவி வழங்கப்பட்டது.
350 சிறு தொழிற்சாலைகள் மற்றும், 47 குடிசைத் தொழில் நிறுவனங்களின் மூலம், 9,000 ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
350 பகல் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் 22 மருத்துவ மையங்கள் மூலம் குடிசைப் பகுதிகள் வாழ்ந்துவந்த தாய்மை எழுதிய பண்டிதர் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
#சாலை_வசதி, #பாலங்கள், #மிதிவண்டி_தனிப்பாதையும் :
17.5 கிலோமீட்டர் உள்வட்ட சாலை, 14.5 கிலோமீட்டர் வரை சென்னை திருவள்ளுவர் சாலை அபிவிருத்தி, 9 சுரங்கப் பாதைகள் மற்றும் 7 பாலங்கள், இரண்டு நிலை பிரிவுகள், 200 கிலோமீட்டர் மிதிவண்டி களுக்கான தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சென்னை மாநகரில் இந்த அரசு 102 பாலங்களையும் 8 பாதசாரிகள் சுரங்க நடைபாதைகளையும் கட்டி முடித்து திறந்துவைக்கப்பட்டது.
திருச்சியில் பாலக்கரையிலும் , சென்னை மாநகரில் நெல்சன் மாணிக்கம் சாலையிலும் , திருத்தணியிலும் ஏற்கனவே அமைந்திருந்த இரும்புப் பாதைகளுக்குப் பதிலாக 3 வாகன சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர 43,357 கிலோ மீட்டர் நீளமுள்ள புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1985 - 86 ஆம் ஆண்டில் திட்டப் பணிகளின் கீழ் ரூ.43.52 கோடியும் திட்டம் சாராப் பணிகளின் கீழ் ரூ.46.33 கோடியும் செலவிடப்பட்டது.
மதுரை மாவட்டம், தேனி அருகே கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ரூ.7 லட்சம் செலவில் பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 1980 - 81 ஆம் ஆண்டில் 120 ஒன்றியங்களில் தன்னிறைவுத் திட்டம் நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
#6014_கிலோமீட்டர்_தூரம்_சாலைகள் :
ஊரகச் சாலைகள் திட்டம் கட்டடம் கட்டடமாக நிறைவேற்றப்பட்டது. ரூ.7567.19 லட்சம் மதிப்பீட்டில் 6363.66 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகளுக்கு 6 கட்டங்களாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. 31.3.1985 வரை 2248 பிரதான குடியிருப்புகளும் குறைந்த அளவு மக்கள் தொகையில் உள்ள 1977 இடைப்பட்ட கிராமங்களும் பயன்பெறும் வண்ணம் ரூ.5831 லட்சம் செலவில் 6014 கிலோ மீட்டர் மொத்த நீளம் கொண்ட சாலை பணிகள் முடிவடைந்தன. ரூ.10 கோடி மதிப்பீட்டிலான 7 கட்டப் பணிகளுக்கான புதிய பிரேரனைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது.
ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 1984 - 85 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11.40 கோடி தொகை செலவிடப்பட்டது. 31.3.1985 இறுதியில் இத்திட்டத்தின்கீழ் சுமார் 1940 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் முடிக்கப்பட்டன.
#ஊரக_வளர்ச்சித்_துறையின் #ஒப்பற்ற_பணிகள் :
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் வறுமைக்கோட்டின் பிடியிலிருந்து விடுபட்டு வளமைக் கோட்டையை அடைய வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர் நமது அன்பிற்குரிய முதலமைச்சர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள். பதவியேற்று ஏறத்தாழ 10 ஆண்டுகாலத்திற்குள் கிராமப்புறம் முன்னேற்றத்திற்கென மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆற்றியுள்ள பணிகள் , இதுவரை எந்த ஆட்சியாலும் செய்யப்படவில்லை என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
மரியாதைக்குரிய அண்ணன் திரு சைதை துரைசாமி அவர்கள் தொகுத்து வெளியிட்ட "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி சாதனை" பதிப்பிலிருந்து இந்தப் பகிர்வு..
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.
Saravanan Subramanian























